சீரற்ற வானிலை – வறட்சி காரணமாக 5 இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை மற்றும் கடும் வறட்சி காரணமாக 5 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்த நிவாரண மத்திய நிலைய பணிப்பாளர் சமிந்த பதிராஜ் இதனைத் தெரிவித்துள்ளார். வறட்சி காரணமாக, 3,10,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்தின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட வறட்சியான காலநிலை காரணமாக, நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 2 இலட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சீரற்ற வானிலை காரணமாகவும் கடும் காற்று காரணமாகவும் 2,045 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த நிவாரண மத்திய நிலைய பணிப்பாளர் சமிந்த பதிராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சீரற்ற வானிலை மற்றும் கடும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply