மகாத்மா காந்திக்கு மரியாதை – வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட துபாயின் புர்ஜ் கலிஃபா

இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களுள் முக்கியமானவர் மகாத்மா காந்தி. வன்முறையில் ஈடுபடாமல், சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்டதால், மகாத்மா என்று அழைக்கப்பட்டார். இவரது பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
https://www.youtube.com/watch?time_continue=5&v=JUlk5aOotx4

 
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்ததினம் நாடு முழுவதும் நேற்று (அக். 2) கொண்டாடப்பட்டது. காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினார்கள். நாடு முழுவதும், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
 
 
இந்த நிலையில் காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக, துபாயில் உள்ள உலகின் உயர்ந்த கட்டிமான புர்ஜ் கலிஃபா நேற்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. கலிஃபா கோபுரத்தில் இந்திய மூவர்ண கொடி மற்றும் காந்தியின் புகைப்படம் மற்றும் வாசகங்களும் அதில் இடம்பெற்றிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply