ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் பதவியில் இருந்து நிக்கி ஹாலே ராஜினாமா
193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் 29-வது தூதராக இந்திய வம்சாவளி பெண்ணான நிக்கி ஹாலே கடந்த 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
அமரிக்காவின் அதிபராக ஒபாமா பதவி வகித்த காலக்கட்டத்தில் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தின் 116-வது கவர்னராகவும் பதவி வகித்து வந்த நிக்கி ஹாலே, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் பதவியை இன்று ராஜினாமா செய்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அவரது ராஜினாமாவுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக முழுமையான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் நிக்கி ஹாலேவின் ராஜினாமாவை அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்றுகொண்டதாக அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply