அமெரிக்காவில் மூன்று இலட்சம் சிறுவர்கள் பட்டினியில் வாடும் நிலை
அமெரிக்காவில் மூன்று இலட்சம் சிறுவர்கள் பட்டினியில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க நிறுவன மொன்று நடாத்திய ஆய்வுகளில் இத்தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் ஐந்து வயதுக்குக் கீழான சிறுவர்களே, இவர்கள் உரிய வயதில் இச்சிறுவர்களுக்கு உணவு கிடைக்காததால் சுகாதாரக் கேடுகளுக்கும் ஆளாகின்றனர்.
வடக்கு கரோயினா, ஒஹியோ, டெக்சாஸ், நியூமெக்ஸிகோ, கன்சாஸ், ஆர்ஜனாஸ் ஆகிய அமெரிக்க மாநிலங்களிலே கூடுதலான சிறுவர்கள் பட்டினியால் உள்ளனர். எதிர்நோக்கும் பாரிய நிதி நெருக்க டியிலிருந்து இக் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய தன் அவசியத்தை ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. உணவுகளைப் பெறுவதற்கான உரிமைகள் இக்குழந்தைகளுக்கு வழங்கப்படாவிட்டால் இந்நிலைமைகளிலிருந்து இச்சிறுவர்களை மீட்க முடியாது. புரதச் சத்துள்ள உணவுகளே அவசரம் தேவைபடுகின்றன.
வருடாந்தம் அமெரிக்காவில் அழகு சாதனங்களுக்காகச் செலவிடும் நிதியைச் சேமித்து முறையாகத் திட்டமிடின் இச்சிறுவர்களுக்கு உதவ முடியுமெனவும் யுத்தங்களுக்கான செலவுகளைக் குறைப்பதும் சிறந்த முறையென்றும் மொழியப்பட்டுள்ளன. அமெரிக்காவின் 11 மாநிலங்களில் 20 வீதமான குழந்தைகள் உணவின்றிச் தவிப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply