மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: ஐ.நா செயலர் பான்கீ மூன்
கடந்தவார இறுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் தொடரும் மோதல்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கைவிடுத்துள்ளது. மேலதிகமான இரத்தக்களரி ஏற்படாதவாறு தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயவேண்டும்” என ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன், இலங்கை அரசாங்கத்திடம் அவசரவேண்டுகோள் முன்வைத்துள்ளார்.
அதேநேரம், விடுதலைப் புலிகளும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு இணங்கவேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.“கடந்த வார இறுதியில் 100ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்” என பான்கீ மூனின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“கடந்த சில மாதங்களில் ஏற்கனவே ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். மேலும் பலர் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளனர்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தவார இறுதியில் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 100ற்கும் மேற்பட்ட சிறுவர்களும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கொல்லப்பட்டதாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டன் வெயிஸ் நேற்றுத் திங்கட்கிழமை கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்தே இலங்கையில் தொடரும் மோதல்கள் நிறுத்தப்படவேண்டுமென ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. அலுவலகப் பேச்சாளரின் கருத்து அடிப்படையற்றது: மஹிந்த சமரசிங்க
இதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் இரத்தக்களறி ஏற்பட்டிருப்பதாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் தெரிவித்திருப்பது ஆதாரமற்றதென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, இடர்முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்வாறு கூறினார்.
கோர்;டன் வெய்ஸ் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது இது முதற்தடவையில்;லையெனக் கூறிய அமைச்சர், இலங்கையில் இரத்தக்களறி எற்பட்டிருப்பதுடன், இந்தத் தகவல்கள் நம்பக்கூடியவையென கோர்டன் வெய்ஸ் கூறியதாகவும் குறிப்பிட்டார். எதனடிப்படையில் கோர்டன் வெய்ஸ் இந்த அறிக்கையை விடுத்தாரெனக் கேள்வியெழுப்பிய அமைச்சர், இலங்கை நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானங்களை ஏற்கப்போவதில்லையெனக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply