இலங்கை வரும் கடற் கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட கப்பல்

சோமாலிய கடற் கொள்ளையர்களால் நேற்று முன்தினம்  விடுவிக்கப்பட்ட பிரித்தானியா கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான மலஸ்பினா காசல் எனும் சரக்கு கப்பல் தற்சமயம் கொழும்பு துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு வரும் இந்த சரக்கு கப்பல் கொழும்பு துறைமுகத்தில் ஆறு நாட்கள் வரை தரித்து நிற்கும் என தெரியவருகின்றது.

பல்கேரிய மாலுமிகளை அதிகளவில் கொண்ட இந்த சரக்கு கப்பல் கடற் கொள்ளையர்களால் கடந்த சில மாதத்திற்கு முன்னர் கடத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த சரக்கு கப்பல்  நேற்று முன்தினம விடுவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களின் கோரிக்கைக்கு இணங்க கப்பப் பணம் செலுத்தப்பட்டதாக பல்கேரிய வெளிவிவகார அமைச்சர் மிலன் கேரிமெட்சிவ் உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply