ஆப்கானிஸ்தானில் அரசு உயரதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 25 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஃபரா மாகாணத்தில் இருந்து அருகாமையில் உள்ள ஹேரட் மாகாணத்தை நோக்கி பரா மாகாண கவுன்சில் தலைவர் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் 25 பேர் ஒரு ராணுவ ஹெலிகாப்டரில் இன்று சென்று கொண்டிருந்தனர்.
இரு மாகாணங்களுக்கும் இடையிலான அனார் டாரா மாவட்டத்துக்கு உட்பட்ட மலைப்பகுதி வழியாக சென்றபோது (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 9 மணியளவில் மோசமான வானிலையால் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் சென்ற 25 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply