மோடி ஜாக்கெட் அணிந்த தென்கொரிய அதிபர்

பிரதமர் நரேந்திர மோடி, கை இல்லாத மேல் கோட்டுகளை அணிவது வழக்கம். இது, ‘மோடி ஜாக்கெட்’ என்றே அழைக்கப்படுகிறது. இந்த ரக ஜாக்கெட்டுகளை தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு பிரதமர் மோடி பரிசாக அனுப்பி வைத்துள்ளார். மூன் ஜே இன், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மூன் ஜே இன், கடந்த ஜூலை மாதம் இந்தியாவுக்கு வந்தார். பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, அவரது ஜாக்கெட் கம்பீர தோற்றத்தை அளிப்பதாக புகழ்ந்துரைத்தார்.

அதை மனதில் கொண்டு, அதே பாணியில் நுட்பமாக தைக்கப்பட்ட 4 ஜாக்கெட்டுகளை தென்கொரிய அதிபருக்கு தனது பரிசாக மோடி அனுப்பி வைத்துள்ளார். அந்த ஜாக்கெட்டை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை மூன் ஜே இன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடை, தனக்கு கச்சிதமாக பொருந்துவதாகவும், மோடிக்கு நன்றி என்றும் அவர் கூறியுள்ளார். மோடி அனுப்பி வைத்த 4 ஜாக்கெட்டுகளின் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும், உலக அமைதிக்கு ஆற்றிய பணிக்காக பிரதமர் மோடி கொரிய அமைதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மூன் ஜே இன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply