பாராளுமன்றத்தில் பிரதமர் ஆசனம் மஹிந்தவுக்கு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டுள்ளதனால், பாராளுமன்றத்தில் பிரதமருக்கான ஆசனத்தை அவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தைக் கூட்டி அங்குள்ள ஆதரவை நிரூபிக்கும் வரை நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கதான் என ஐக்கிய தேசியக் கட்சி கூறிவரும் நிலையில், ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply