அமெரிக்காவில் திறமையான வெளிநாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கப்படும் : டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் பணி புரியும் வெளிநாட்டினர் கிரீன் கார்டு அல்லது குடியுரிமைக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அவர்களில் இந்தியர்கள் மட்டும் 6 லட்சம் பேர் அடங்குவர். தங்களுக்கு கிரீன்கார்டு மூலம் குடியுரிமை கிடைக்கும் என காத்திருக்கும் நிலையில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

அதனால் அவர்களின் எண்ணம் ஈடேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் ஆயிரக்கணக்கானவர்கள் சட்ட விரோதமாக நாட்டில் குடியேறியுள்ளனர். அவர்களால் திறமையான வெளிநாட்டினருக்கு சட்டப்பூர்வ குடியுரிமை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கிரீன் கார்டு பெற விண்ணப்பித்து அதற்காக லட்சக் கணக்கானோர் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அவர்கள் திறமைசாலிகள் எந்த பணியையும் மிக சரியாக செய்கின்றனர். அவர்கள் நமக்குதேவை.

ஏனெனில் நமது நாட்டில் (அமெரிக்காவில்) பல கம்பெனிகள் உள்ளன. அவற்றில் பணிபுரிய ஊழியர்கள் தேவை. திறமையின் அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்கள். எனவே அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படும் என்றார்.

டிரம்பின் இந்த அறிவிப்பு கிரீன்கார்டு விண்ணப்பித்து காத்திருக்கும் வெளிநாட்டி னருக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply