பிரான்ஸில் வலுப்பெறும் தனிநாட்டு கோரிக்கை : இன்று வாக்கெடுப்பு
பிரான்ஸிலிருந்து பிரிந்து தனிநாடாகச் சுதந்திரப்பிரகடனம் செய்வதற்கான பொதுவாக்கெடுப்பு புதிய கலெடோனியாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. பிரான்சின் கடல் கடந்த மாகாணமான புதிய கலெடோயாவில் 174.154 வாக்காளர்கள் உள்ளனர்.
அண்மையில் Harris Interactive என்ற அமைப்பு நடாத்திய கருத்துக் கணிப்பில், 66 சதவீத மக்கள் புதிய கலெடோனியா சுதந்திர நாடாவதை எதிர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மோசமான பெருளாதார நிலை, கடல்கடந்த மாகாணங்களில் காட்டப்படும் வேற்றுமை, எதிர்காலம் நோக்கிய அச்சம் என்பனவே புதிய கலெடோனிய மக்கள் பிரான்ஸிலிருந்து பிரிந்து தன்னாட்சி பெற முயற்சிப்பதற்கான காரணம் என குறிப்பிடப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply