சூழ்ச்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்ற முடியாது: அனுரகுமார திஸாநாயக்க
சூழ்ச்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்ற இடமளிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனை (திங்கட்கிழமை) மாலை சந்தித்து பேசியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த 26 ஆம் திகதி இந்த நாட்டில் நடைபெற்றது ஒரு அரசியல் சூழ்ச்சி. நாம் சூழ்ச்சியின் மூலம் ஆட்சியை கவிழ்க்கவோ, ஆட்சியை அமைக்கவோ இடம்கொடுக்க கூடாது.
நாட்டில் ஜனநாயகம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு மக்களும், அரசியல்வாதிகள் என்ற வகையில் நாமும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
எனவே ஜனநாயகத்திற்கு எந்த சர்ப்பத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம்.
இந்த இடத்தில் எதிர்க்காலத்தில் எவ்வாறு ஜனநாயகத்தைப் பாதுகாப்பது, எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது, எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது குறித்து நாம், எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தருடன் கலந்துரையாடினோம்.
இது குறித்து நாம் பொதுமக்களுடன் கலந்துரையாடவும், நாடாளுமன்றில் அரசியலமைப்பு சூழ்ச்சியையும், அரசியல் சூழ்ச்சியையும் தோற்கடிக்கவும், தேவயான சந்தர்ப்பங்களில், ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply