முரளீதரனுடன் TNA அரசியல் பேசவில்லை :மாவை சேனாதிராஜா

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடலை முன்னெடுத்தோம் எனவும், அவர்கள் அதனைப் புறக்கணித்ததாகவும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். இருப்பினும், தாம் இன்னும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சகோதர மொழி ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விநாயகமூர்த்தி முரளிதரனுடன் தமக்கு எந்தவித அரசியல் தொடர்பும் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அவருடன் எந்தவித அரசியல் தொடர்பும் கிடையாது எனவும், நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலையும் அவருடன் மேற்கொள்ளவில்லையெனவும் மாவை சேனாதிராஜா எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply