கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம் – பள்ளி முதல்வர், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல்

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்குவது கேமரூன் நாடு. அந்த நாட்டில் தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர். இந்நிலையில், கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் இன்று உள்ளே புகுந்தனர்.

அங்கு படித்து வந்த 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 78 பேர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர், டிரைவர் ஆகியோரை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.

கடத்தி செல்லப்பட்டவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர், பயங்கரவாதிகளின் கோரிக்கைகள் என்ன என்பன போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணியை கேமரூன் அரசு முடுக்கி விட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply