உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 1534 பேர் மீது வழக்கு

தமிழகத்தில் தீபாவளி நாளன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த உத்தரவை மீறி மற்ற சமயங்களில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை கிடைக்கும் என காவல்துறை எச்சரித்தது. இந்த உத்தரவை ஏற்று ஒரு சில பகுதிகளில் மட்டும் பட்டாசுகள் வெடிப்பதை மக்கள் தவிர்த்தனர். பெரும்பாலான பகுதிகளில் காலை முதல் இரவு வரை பட்டாசுகளை வெடித்ததை காண முடிந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 1534 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில், நெல்லை, மதுரை, தஞ்சை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்களில் 219 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply