புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏதுவாக சர்வதேச ஊடகங்கள் செயற்பாடுகின்றது:அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல
புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக சர்வதேச ஊடகங்கள் செயற்படுவதாக அரசாங்கம் நேற்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. இதேவேளை, துரதிர்ஷ்ட வசமாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் புலிகளின் நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட்டு விட்டதாகவும் அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அரசாங்கம் ஷெல் தாக்குதல் நடத்தியதில் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டும் பெண்கள், சிறுவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமுற்றதாகவும் புலிகள் சார்பு ‘தமிழ் நெற்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயாமல், அதனை அவ்வாறே முன்னணி சர்வதேச ஊடகங்கள் பலமீள் பிரசாரம் செய்துள்ளன என்று தெரிவித்த அமைச்சர், ‘புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்போது மோசமான நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். எனவே, சிவிலியன்கள் தொடர்பாகப் பிரசாரம் செய்து, எவ்வாறேனும் ஐக்கிய நாடுகள் சபையைத் தலையிடச் செய்து விடவேண்டு மென் பதே அவருக்குள்ள ஒரே மாற்று வழியாகக் கையாள்கிறார்.
இதற்கென ஒரு நிகழ்ச்சி நிரலையும் தயாரித்துச் செயற்படுகிறார்கள்.
இதற்கு ஆதரவாக சர்வதேச ஊடகங்களும் செயற்படுகின்றன” என்றும் தெவித்தார். தமிழ்நெற் இணையம் கடந்த பல வருடங்களாகப் பொய்ப்பிரசாரத்தை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் கூறினார். ஷெல் தாக்குதலில் சிவிலியன்கள் கொல்லப்பட்டதாகத் தகவல் வழங்கினாரென்று பெயர் குறிப்பிடப்பட்ட மருத்துவர், சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றுபவரல்ல என்று தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, சிவிலியன் பகுதி மீது எந்தத் தாக்குதலும் மேற்கொள்ளப்படுவதில்லை. படையினர் தற்போது இரண்டரை கிலோ மீற்றர் விசேட பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்துவிட்டார்கள்.
ஆகவே, பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கான நிகழ்ச்சி நிரலை புலிகள் தயாரித்துள்ளார்களென்று தெரிவித்தார். இறைமையுள்ள ஒரு நாட்டுக்கு எதிராகவும் பக்கச் சார்பாகவும் புலிகள் செயற்படுகிறார்களென்று குற்றஞ்சாட்டிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் புலிகளின் நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட்டு விட்டாரென்றும் குற்றஞ்சாட்டினார். வெளிநாடுகளுக்குச் சென்று மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரசாரம் செய்யப் போவதாகக் கூறி அவர், புலிகள் இயக்கத்திற்குச் சாதகமாகச் செயற்படுகிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply