புலிகளின் பிடியிலிருந்து 169 பொதுமக்கள் தப்பிவந்துள்ளனர்
புலிகளின் பிடியிலிருந்து கடந்த இரு தினங்களில் தப்பி வந்த 169 பொது மக்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதற்கமைய புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை நடைபெற்றது.
பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில் :-
நேற்றைய தினம் 90 பொது மக்களையும், நேற்று முன்தினம் 79 பொது மக்களையும் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர். இராணுவத்தின் 53வது படைப் பிரிவினர் 60 பொது மக்களையும், இராணுவத்தின் 58 வது படைப் பிரிவினர் 50 பொதுமக்களையும் இராணுவத்தின் 59 வது படைப் பிரிவினர் 29 பொதுமக்களையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் செய்து கொடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply