ஊர்காவற்றுறை ஆயுர்வேத வைத்தியசாலை ரூ. 4000 மில். செலவில் அபிவிருத்தி

ஊர்காவற்றுறை சித்த ஆயுர்வேத ஆஸ்பத்திரியை சுமார் நாலாயிரம் மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக சுதேச மருத்துவத் துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் ஊடாக இந்த ஆஸ்பத்திரி அபிவிருத்தி செய்யப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆஸ்பத்திரியை அபிவிருத்தி செய்வதற்கான புதிய திட்டத்தின் கீழ் ஒரு வார்ட்டில் ஐம்பது பேர் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற வகையில் பத்து வார்ட்டுகள் அமைக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில் :-

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் போதனா ஆஸ்பத்திரியாக ஊர்காவற்றுறை சித்த ஆயுர்வேத ஆஸ்பத்திரி உள்ளது. யுத்தம் காரணமாக இந்த ஆஸ்பத்திரி பெரிதும் பாதிக்கப்பட்டது.வடக்கு, கிழக்கிலுள்ள ஒரே சித்த ஆயுர்வேத ஆஸ்பத்திரி இதுவே ஆகும். இதனைப் புலிகள் தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாலேயே இதன் கட்டடங்கள் பெரிதும் சிதைவடைந்துள்ளன. வடக்கு வசந்தத்தின் கீழ் பத்து வார்ட்டுகளும், மருந்துப் பொருள் உற்பத்தியகமும், மருந்தகமும், ஆய்வுகூடம் மற்றும் வெளிநோயாளர் பிரிவு, நிர்வாகக் கட்டடத் தொகுதி ஆகியனவும் அமைக்கப்படவுள்ளன என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply