நலன்புரி நிலையங்களுக்கு யூனிசெப் 1000 மலசலகூடங்கள் அன்பளிப்பு

புலிகளின் பிடியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குத் தப்பி வந்து வவுனியாவில் உள்ள நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு 1000 மலசலகூடங்களை அமைத்துக் கொடுக்க  யுனிசெப் நிறுவனம் முன் வந்துள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அணர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் யு.எல்.எம். ஹால்தீன் தெரிவிக்கையில், வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோருக்கு மலசலகூட வசதிகளைச் செய்துகொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தையொன்று நேற்று முன்தினம் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது. மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் யுனிசெப் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோருக்கு அரசாங்கம் சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அவர்களது தேவைகள் இனங்காணப்பட்டு நாளாந்தம் அவை நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த அடிப்படையில் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ள 1000 மலசலகூடங்கள் முதற்கட்டமாக தற்போது இயங்கி வரும் நலன்புரி நிலையங்களிலேயே அமைக்கப்படும். இவ்வாறு அமைக்கப்பட்டு மிகுதியானவை புதிதாக அமைக்கப்படவுள்ள நிவாரணக் கிராமங்களுக்கு வழங்கப்படும் எனக் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply