நாளை இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில், நாடாளுமன்றம் மீண்டும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது. இந்நிலையில், நாளைய அமர்வு நேரத்தின்போது நாடாளுமன்ற வளாகம் மற்றும் கட்டடத்தொகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் கடந்த 14,15 மற்றும் 16ஆம் திகதிகளில் ஆளும் எதிர்த்தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்தே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில், நாளைய அமர்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரிய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே சபைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பார்வையாளர் என எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் கடந்த 16ஆம் திகதி ஏற்பட்ட மோதலையடுத்து கடந்த 19ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து 19ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியபோது, வெறும் ஏழே நிமிடங்களில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு இருக்கும்போது, நாளைக் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போதும் ஆளும் எதிர்த்தரப்பினரிடையே சர்ச்சைகள் ஏற்படலாம் என கருதப்படுகின்றமையாலேயே தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply