சோமாலியா – அமெரிக்க படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் 6 கிளர்ச்சியாளர்கள் பலி
சோமாலியாவில் அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த சோமாலியா அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த வேட்டையில் அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது.இந்நிலையில், சோமாலியா நாட்டின் ஹரதரே பகுதியில் பதுங்கி இருந்த கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா இன்று வான்வெளி தாக்குதல் நடத்தியது.
முதல் கட்ட தாக்குதலில் சுமார் 6 கிளர்ச்சியாளர்கள் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தொடர்நு நடத்திய தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் அழிக்கப்பட்டன என அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply