விவசாயத்திற்கான வரிகளை அகற்ற நடவடிக்கை : மஹிந்த
விவசாய நடவடிக்கைகளின் மூலம் கிடைக்கின்ற வருமானங்களுக்கான வரியை நீக்க இந்த வாரத்தினுள் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெலியத்த பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டார்.
அரசாங்கம் பொறுப்பேற்கப்படுகின்ற போது, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருந்தன. அனைத்து மட்டத்திலும் வரி அறவிடப்பட்டது. அவற்றுக்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயத்திற்கு முக்கிய இடமளித்து அவற்றுக்கான வரிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த வாரம் முதல் அதற்கான பணிகள் இடம்பெறும். அத்துடன், வரிகளுக்கு ஐந்து வருட கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
மேலும், கடந்த அரசாங்கத்திலும் பார்க்க சிறந்த பொருளாதார நிலையில் தற்போது நாடு இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply