யுத்தத்தை அரசு நிறுத்தாவிடில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூண்டோடு ராஜினாமா- சிவாஜிலிங்கம் எம்.பி

வடக்கில் இராணுவ நடவடிக்கை காரணமாக பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இலங்கை அரசாங்கம் உடனடியாக யுத்த நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பிக்கள் அனைவரும் தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ராஜினாமாச் செய்யும் நிலை ஏற்படுமென புதடில்லியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

மத்திய அரசின் முக்கிய தலைவர்களைச் சந்திப்பதற்காக புதுடில்லிக்கு வருகை தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களான சிவாஜிலிங்கம,; எம்.ஸ்ரீகாந்தா ஆகியோர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தனர்.

புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்தப் போவதில்லையென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ கூறியதையடுத்தே இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை இங்கு விளக்கினாh.;

இலங்கை அரசு யுத்த நிறுத்தம் செய்வதற்கு இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும். தமிழர்கள் உரிமைகளை நிலைநாட்ட இந்தியத் தலையீடு அவசியம்.
இலங்கை அரசாங்கம் உடனடியாக யுத்த நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பிக்கள் அனைவரும் தமது பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை ராஜினாமாச் செய்யும் நிலை ஏற்படும். நாங்கள் இலங்கை திரும்பியதும் தலைமைப்பீடம் இது குறித்து முடிவு செய்யும். என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த எம்.ஸ்ரீகாந்தா எம்.பி: இலங்கையில் சிங்கள மக்களுக்கு நிகராக தமிழ் மக்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும். இதுவே எமது கோரிக்கை.தமிழ் மக்களின் அபிலாi~களைத் தீர்க்கக் கூடிய தீர்வினை ஏற்க நாம் தயாராகவுள்ளோம். அவ்வாறானதொரு தீர்வு கிடைக்குமாயின் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் அரசியல் பாதiயில் இணைந்து கொள்வாரெனக் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply