காட்டுச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது வாக்கெடுப்பு நடத்துங்கள்: அநுரகுமார

”அரசாங்கத்தில் நிலவும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும். காட்டுச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் நாடாளுமன்றில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், தெரிவுக்குழு உறுப்பினர்கள் தொடர்பாக வாக்கெடுப்பிற்குச் செல்லுமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எமது நாட்டில் காட்டுச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. நிலவு வெளிச்சத்திலேயே எமது நாட்டின் பிரதமர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தெரிவுக்குழுவிற்காக வாக்கெடுப்பு நடத்துங்கள். பெயரை குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்துங்கள். எமது பிரச்சினைகளை நாடாளுமன்றில் தீர்த்துக்கொள்வோம்.

சபாநாயகரே, தங்களின் செயற்பாடு அரசியலமைப்பிற்கு முரணானதென குறிப்பிடுகின்றனர். அப்படியாயின் சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவாருங்கள். அதற்கும் இந்த நாடாளுமன்றம் தயாராகவே உள்ளது” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply