மன்னார் – பூநகரி வீதியில் வலைப்பாடு, பேய்முனை படையினர் வசம்:

A-32 தரைவழிப்பாதை இன்னும் ஓரிரு தினங்களில் திறக்க ஏற்பாடு

யாழ்ப்பாணத்திற்கான கரையோர தரைவழிப்பாதை இன்னும் ஓரிரு தினங்களில் திறந்து வைக்கப்படுமென்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மன்னார் – பூநகரி ஊடாக ஏ௩2 பாதை 20 வருடங்க ளுக்குப் பின்னர் திறந்து வைக்கப்படுவதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மன்னாரிலிருந்து 80 கிலோ மீற்றர் நீளமான இந்தப் பாதையில் 77 கிலோ மீற் றரை படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகக் கூறிய அமைச்சர் ரம்புக்வெல்ல, முதலில் இந்தப் பாதையில் படையினர் போக்குவர த்தை ஆரம்பிப்பார்களென்றும், பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் போக்கு வரத்திற்கு வழிசமைக்கப் படுமெனவும் கூறினார்.

இதேவேளை, மன்னார்- பூநகரி பிரதேசத்திலுள்ள பேய்முனை (டெவில் பொயி ன்ற்) வலைப்பாடு ஆகிய பகுதிகளை படையினர் நேற்றுக் காலை தமது கட்டுப்பாட் டின் கீழ் கொண்டு வந்து விட்ட தாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புலிகளின் செயற்பாடுகள் தற்போது பூநகரியுடன் மட்டுப்படுத்தப் பட்டிருப்பதாகக் கூறிய இராணுவப் பேச்சாளர் விரைவில் அந்தப் பகுதியிலும் புலிகளை முறியடிக்க நடவடிக்கை தொடர் வதாகவும் கூறினார். கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம், மடம், ‘பண்டிவெட்டிக்குளம், அக்கராயன்குளம், கிரஞ்சி, பாலாவி ஆகிய பகுதிகளை ஏற்கனவே படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகக் கூறிய பிரிகேடியர்,

களமுனையில் காயமுற்ற பெண் புலி உறுப்பினர் ஒருவரை படைச்சிப்பாய் ஒருவர் மீட்டுள்ளதாகவும், அந்தப் பெண் புலி உறுப்பினர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரம்புக்வெல்லவுடன், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயாக்கார, கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணாயக்கார தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply