நீதியரசர் சரத் என்.சில்வா வவுனியா விஜயம் மனிக்பாம் நிவாரண கிராமங்களையும் பார்வையிடுவார்

பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா இன்று காலை வவுனியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவருடன் நீதியமைச்சின் முக்கிய அதிகாரிகளும் வருகைதந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனிக்பாம் பகுதியில் உள்ள நிவாரண கிரா மங்களுக்குச் சென்ற அவர் அங்குள்ள இடம் பெயர்ந்த மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடு  தலைப்புலிகள் அமைப்பில் இணைந் திருந்த வயது குறைந்தவர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு நட வடிக்கைகள் தொடர்பாகவும் அவர் முக்கிய அதிகாரிகளுடன் அங்கு பேச்சுக்கள் நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply