நெதர்லாந்து பள்ளியில் மாணவி சுட்டுக்கொலை
நெதர்லாந்து நாட்டில் உள்ள ரோட்டர்டம் என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு 300 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர்.நேற்று வகுப்பு முடிந்து மாணவிகள் அங்குள்ள மோட்டார் வாகன செட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து மாணவிகளை நோக்கி சுட்டார். இதில் 11 வயது மாணவி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரை சுட்டவர் துருக்கி வம்சாவளியை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர். என்ன காரணத்தினால் சுட்டார் என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த நபர் ஏற்கனவே மாணவியின் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் மாற்றப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கவலை தெரிவித்து அரசுக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply