புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை விபரங்கள்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. புதிய அமைச்சரவை விபரங்கள் வருமாறு-

♦ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் – புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி,தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

♦ மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகம்

♦ ராஜித சேனாரத்ன – சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்தியம்

♦ மனோ கணேசன் – தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் சமூக முன்னேற்ற மற்றும் இந்துவிவகாரம்

♦ ரவுப் ஹக்கீம் – உயர் கல்வி, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்

♦ ஜோன் அமரதுங்க – சுற்றுலாத்துறை, வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்துவ விவகாரம் அமைச்சர்

♦ காமினி ஜயவிக்ரம பெரேரா – புத்த சாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி

♦ லக்ஷ்மன் கிரியெல்ல – பொது முயற்சியான்மை, மத்திய மலைநாட்டு மரபு மற்றும் கண்டி அபிவிருத்தி

♦ திலக் மாரப்பன – வெளிநாட்டு அலுவல்கள்

♦ஹரின் பெர்னாண்டோ – தொலைத் தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை

♦ ரவி கருணாநாயக்க – மின் சக்தி மற்றும் எரிசக்தி

♦ வஜிர அபேவர்தன – உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்

♦ தலதா அத்துகோரல – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

♦ அகிலவிராஜ் காரியவசம் – கல்வி

♦ சஜித் பிரேமதாஸ – வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

♦ ரிஷாத் பதியுதீன் – கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு

♦ பாட்டலி சம்பிக்க ரணவக்க – பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி

♦ நவீன் திசாநாயக்க – பெருந்தோட்ட தொழிற்துறை

♦ தயா கமகே – தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்

♦ மலிக் சமரவிக்ரம – அபிவிருத்தி மூலோபாயம், சர்வதேச வர்த்தகம் மற்றும் விஞ்ஞான தொழிநுட்பம்

♦ பி.ஹரிசன் – விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்

♦ கபீர் ஹாசிம் – பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்

♦ ரஞ்சித் மத்தும பண்டார – பொது நிர்வாகம், இடர் முகாமைத்துவ

♦ கயந்த கருணாதிலக – காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு

♦ அர்ஜுன ரணதுங்க – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

♦ பழனி திகாம்பரம் – மலைநாட்டு புதிய கிராமங்கள், அடிப்படை வசிகள் மற்றும் சமூக அபிவிருத்தி

♦ சந்திரானி பண்டார – மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்

♦ அப்துல் ஹலீம் – தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகார

♦ சாகல ரத்னாயக்க – துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி

விளையாட்டுத்துறை அமைச்சு ஹரின் வசம்!

புதிய அரசாங்கத்தின் விளையாட்டு தொலைத்தொடர்பு டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுப் பொறுப்பு ஹரின் பெர்னாண்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply