அதிசொகுசு ரயில் ஒன்று கொழும்பு : யாழ் சேவையில் இணைப்பு

இந்தியாவிலிருந்து புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட அதிசொகுசு ரயில்கள் இரண்டில் ஒன்று கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தவகையில், கடந்த 19 ஆம் திகதி கொழும்பு கோட்டையிலிருந்து பயணித்த ரயில் மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணத்தை அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மீண்டும் மாலை 6.00 மணிக்கு அங்கிருந்து கொழும்பை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் கொண்ட பயணப் பெட்களையும், சாதாரண பயணப் பெட்டிகளும் கொண்ட இந்த ரயிலில் 810 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply