போலந்து பிரஜைகளின் உரிமையை பாதுகாக்க முன்னுரிமை வழங்கப்படும்: பிரதமர் மே
போலந்து மக்கள் தொடர்ந்தும் பிரித்தானியாவில் வசிக்கலாம் என்றும், போலந்து பிரஜைகள் தங்கியிருப்பதை தாம் விரும்புவதாகவும், பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். மேலும், போலந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
லண்டனில் போலந்து பிரதமருடன் கூட்டாக ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், போலந்து சமூகத்தினரை சந்தித்து அவர்கள் எமது பொருளாதாரம் மற்றும் சமுதாயத்திற்கு வழங்கியுள்ள மகத்தான பங்களிப்பு குறித்து பேசக் கிடைத்தமையை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் போலந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கே நான் முன்னுரிமை வழங்கி வருகிறேன்.
அந்தவகையில், பிரெக்சிற் உடன்படிக்கை அவர்கள் பிரித்தானியாவில் வசிக்கவும், கல்வி கற்கவும், தொழில்வாய்ப்பில் ஈடுபடுவதற்குமான உத்தரவாதத்தை பெற்றுக் கொடுக்கும் எனத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply