தொடரும் சீரற்ற காலநிலை – வான்கதவுகள் திறப்பு
நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளது.
அடை மழை காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மாட்ங்களில் 13646 குடும்பங்களை சேர்ந்த 44959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்ட 2661 குடும்பங்களைச் சேர்ந்த 8539 பேர், 52 முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, 151 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அடைமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ராஜாங்கனை, அங்கமுவ, தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply