பாகிஸ்தானில் ஈரான் தூதரக அதிகாரி கடத்தப்பட்டார்
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் காரில் சென்ற ஈரான் தூதரக அதிகாரி ஒருவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரது பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் உள்ள வடமேற்கு எல்லைப்புற மாநில தலைநகர் பெஷாவரில் தீவிரவாதிகள் அமெரிக்காவை சேர்ந்த மக்கள் நலப்பணியாளர் ஸ்டீபன் வான்ஸ் சுட்டுக்கொன்றனர். இதனால் பெஷாவரில் பதட்ட நிலை உருவானது. பல மக்கள் நலப்பணியாளர்கள் பெஷாவரில் இருந்து இஸ்லாமாபாத் நகருக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் பெஷாவரில் இன்னொரு சம்பவம் நடந்து உள்ளது. அங்கு உள்ள ஈரான் தூதரகத்தில் வேலை செய்யும் அதிகாரி ஹஷ் மதுல்லா அத்தர் சதா கடத்தப்பட்டார். இவர் காரில் தன் வீட்டில் இருந்து அலுவலகத்துககு புறப்பட்ட போது காரை ஆயுதம் தாங்கிய சிலர் வழி மறித்தனர். காருக்குள் இருந்த பாதுகாவலரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அதன்பிறகு அவரையும், அவரது கார் டிரைவரையும் தீவிரவாதிகள் கடத்தினார்கள். அத்தர் சதா கடத்தப்பட்டதை ஈரான் தூதரகம் உறுதிப்படுத்தியது.
இந்த கடத்தலுக்கு பாகிஸ்தான் வெளிநாட்டு மந்திரி ஷா முகமது குரேஷி கண்டனம் தெரிவித்து இருக்கிறார். தூதரக அதிகாரியை விரைவில் பிடிப்போம் என்று அவர் உறுதி அளித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply