சிலை உடைப்பு குற்றவாளியை சட்டப்படி தண்டிக்க உதவுவோம்- தெல்கஹகொட பள்ளிவாயல்
மாவனல்லையிலும் அண்டிய பகுதிகளிலும் இடம்பெற்ற புத்தர் சிலை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் தெல்கஹகொட முஸ்லிம் பள்ளிவாயல் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. பிரதேசத்திலுள்ள முஸ்லிம் – பௌத்த மக்களுக்கிடையில் நீண்ட காலமாக காணப்படும் சமாதானமான உறவையும், சகவாழ்வையும் பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கைகள் காணப்பட வேண்டும் எனவும் அப்பள்ளிவாயல் நிருவாகம் கேட்டுள்ளது.
இதனால், இந்த செயல்களுடன் சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும், சட்டப்படி கைது செய்யப்பட்டு, தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அப்பள்ளி நிருவாகம் கவனம் செலுத்தியுள்ளது.
குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்குத் தேவையான சகல உதவிகளையும் தாம் வழங்க தயாராகவுள்ளதாகவும் அப்பள்ளிவாயல் நிருவாகம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply