ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் உத்தேசத்தில் கோத்தா இல்லை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் எதுவும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு கிடையாது என தகவல்கள் வெளியாகியுள்ள. அத்துடன், தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை ரத்துச்செய்யக்கோரி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு விண்ணப்பிக்கவில்லை எனவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ராஜபக்ச குடும்ப வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும், ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், “தனக்குத் தெரிந்தவரையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான திட்டம் அவரிடம் இல்லை” என அவருக்கு நெருங்கி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ராஜபக்ஷ குடும்பத்தின் எதிர்கால அரசியல் வாகனமான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இதுவரையில் தவிர்த்தே வந்திருக்கிறார். எனினும், வியத்மகா, எலிய மகாநாடுகளை அவர் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பாடு செய்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், அண்மையில் கொழும்பில் ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடுவேன்” என்ற அடிப்படையில் கோத்தபாய ராஜபக்ச பதில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் அரசியல் நெருக்கடிகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் செயற்படுவதாகவும் சில நாட்களில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் விரைவில் அறிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் இருந்து பின்வாங்குகிறாரா? என்னும் கேள்வி எழுந்துள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply