டிரம்ப் அதிபர் பதவிக்கு தகுதி இல்லாதவர் : சொந்த கட்சி தலைவர் கடும் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அமெரிக்கா இதுவரை பின்பற்றி வந்த பல வி‌ஷயங்களை எந்த அதிபராக இருந்தாலுமே அதை மாற்றுவது இல்லை. ஆனால், டொனால்டு டிரம்ப் அதுபோன்ற வி‌ஷயங்களையும் மாற்றி வருகிறார். இது, நாட்டின் நலனுக்கு ஆபத்தான வி‌ஷயம் என்று பலரும் கருதுகின்றனர்.

இதனால் அவருடைய சொந்த கட்சியான குடியரசு கட்சியில் கூட எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தற்போது இந்த கட்சியின் மூத்த தலைவரும், செனட் உறுப்பினருமான மிட்ரூம்னி அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் போது அதில் மிட்ரூம்னியும் போட்டியிட்டார். அப்போதே மிட்ரூம்னி, டிரம்பை கடுமையாக விமர்சித்திருந்தார். டிரம்ப் ஒரு பொய்யர். போலியான மனிதர். மோசடிக்காரர் என்று அப்போது அவர் கூறினார்.

இந்த நிலையில் இப்போது கருத்து தெரிவித்துள்ள மிட்ரூம்னி, டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதி இல்லாதவர் என்று கூறி இருக்கிறார்.

இதுபற்றி மேலும் கூறிய அவர், கடந்த 2 ஆண்டாக டிரம்ப் அதிபராக இருந்துள்ளார். அவர் பணியாற்றும் விதத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

இதில் இருந்து பார்க்கும் போது அமெரிக்க அதிபர் பதவிக்கு இவர் தகுதி இல்லாதவர் என்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் அவர் எடுத்துள்ள சில நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் தகுதிக்கு மாறான வி‌ஷயமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் டிரம்பின் நடவடிக்கைக்கு குடியரசு கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் செனட் உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply