மதிப்பிழந்த மைத்திரியை நீக்க ஜனாதிபதி தேர்தல் அவசியம்: குமார வெல்கம
இலங்கை உயர் நீதிமன்றத்தினால் குற்றம் சுமத்தப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களினாலும் சர்வதேசத்தினாலும் மதிப்பிழந்த ஒருவராகவே பார்க்கப்படுகின்றமையால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே சிறந்ததென நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் எந்த தேர்தலை நடத்த வேண்டியது அவசியமென தனியார் ஊடகமொன்றுக்கு நேற்று (வியாழக்கிழமை) வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
அண்மையில் நாட்டில் அரசியல் குழப்பத்தினை உருவாக்கிய விடயத்தில் ஜனாதிபதி மைத்திரியே அனைவரும் குறை கூறுகின்றனர்.
மேலும் நாட்டின் அரசியலமைப்பை மீறியே தனது செயற்பாடுகள் அனைத்தையும் ஜனாதிபதி முன்னெடுத்தார். இதனால் அவர் மீது மக்களிடமும் சர்வதேசத்திடமும் எந்ததொரு மரியாதையும் இல்லாமல் போயுள்ளது.
ஆகையால் தற்போதைய சூழ்நிலையில் மாகாணசபை, நாடாளுமன்றம் ஆகிய தேர்தலை நடத்துவதை காட்டிலும் ஜனாதிபதி தேர்தலை நடத்தி நாட்டின் சிறந்த தலைவரை நியமிக்க வேண்டியதே அவசியம்” என குமார வெல்கம சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply