பெங்களூருவில் கடும் பனியால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு: சென்னைக்கு திருப்பி விடப்பட்டன
வடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் குளிர் நிலவி வருகிறது. காலை நேரங்களில் பனி மூட்டங்கள் அதிக அளவில் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.வடமாநிலங்களைத் தொடர்ந்து தென் மாநிலங்களிலும் குளிர் அதிக அளவில் நிலவி வருகிறது. இன்று காலை பெங்களூருவில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் பனிமூட்டங்கள் காணப்பட்டது. இதனால் சிங்கப்பூர் – பெங்களூரு விமானமும், கோவா- பெஙகளூரு விமானமும் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்தன.
இந்நிலையில் அந்த விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன. மேலும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலான 50 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரத்தில் தாமதம் ஏற்பட்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply