உடன் அமுலுக்கு வந்த 72 பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் உடன் இடைநிறுத்தம்
நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 72 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இடமாற்றம் மறு அறிவித்தல் வரும்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.பொலிஸ் மா அதிபரின் சிபாரிசின்படி இந்த இடமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
பாதுகாப்பு செயலாளரின் பரிந்துரையின்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவுக்கு அமைய தற்போது அது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இடமாற்றம் பெற்றவர்களுள் 27 பிரதான பொலிஸ் பரிசோதகர்களும் 45 பொலிஸ் பரிசோதகர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply