சம்பளத்தை அதிகரித்தால் அரசாங்கத்துக்கு 150 பில்லியன் ரூபா மேலதிக செலவு

அரச நிருவாக சேவையிலுள்ள அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையினால் அரசாங்கத்துக்கு 159 பில்லியன் ரூபா வருடாந்த செலவு ஏற்படுவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இவ்வாறு அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு பிரேரணையை நிறைவேற்றினால், அதற்காக வருடத்துக்கான சம்பளமாக 147 பில்லியன் ரூபாவையும், ஓய்வுதிய சம்பள கொடுப்பனவுக்காக ஒருவருடத்துக்கு 12 பில்லியன் ரூபாவையும் அரசாங்கம் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் இதனால், பாரிய சம்பள முரண்பாடொன்றுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாட்டு தொடர்பில் கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவினால் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மார்ச் மாதம் 5 ஆம் திகதி இவ்வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது. இதில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு ஒரு பெரும் பேசுபொருளாக மாறும் என்பது ஊடகங்களில் நீண்ட நாட்களாக வெளியிடப்பட்டு வரும் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply