IMF உடன் பேச்சுவார்தை நடத்த நிதியமைச்சர் அமெரிக்கா விஜயம்
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் விரிவான கடன் வசதிகள் தொடர்பில் கலந்துரையாடும் வகையிலேயே இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக, சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கிடைக்கப்பெறவிருந்த கடன் வசதி தொடர்பான கலந்துரையாடல் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply