15,000க்கு மேற்பட்ட மக்கள் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் வருகை
பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள படையினர் இன்று (மே. 16) காலை வரை 15,000 க்கு மேற்பட்ட பொதுமக்களை மீட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள 58வது படைப் பிரிவினர் முல்லைத்தீவு வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் நேற்று (மே. 15) ஆறு தற்கொலை வள்ளங்கள், இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள், வெடி பெருட்களையும் மீட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இதேவேளை புலிகள் இயக்கத்திலுள்ள 15, 17, 18 வயதுடைய மூன்று சிறுவர்போராளிகள் 58வது படையணியின் கட்டளைத் தளபதி சுரேந்திர டி சில்வாவிடம் சரணடைந்துள்ளனர்.
மக்களை மீட்டவாறு முன்னேறிச் செல்லும் படையணியினர் நேற்று 12.7 மி.மி துப்பாக்கி, ரி56 ரக துப்பாக்கிகள் 56, 22 60 எம். எம். மோட்டார் குண்டுகள், ராடார் இயந்திரம் ஒன்று, 81 எம். எம். ரக மோட்டார் லோஞ்சர் இயந்திர துப்பாக்கி 122 எம். எம். ரக டிரைபோட் ஒன்று என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர். பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான 59 ஆவது படையணியினரும், பிரிகேடியர் கமல் குணரட்ன தலைமையிலான 53 ஆவது படையணியினரும் இரு முனைகளில் முன்னேறிச் செல்வதுடன் மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கியுள்ள மக்கள் தமது குழந்தைகளை சுமந்தவாறும் வாழும் காயமடைந்தவர்களை சுமந்தவாறும் அரச கட்டுப்பாட்டுக்குள் வருகின்றனர். புலிகளினால் சுடப்பட்டு காயமடைந்தவர்களுக்கும் படையினர் உடனடியாக சிகிச்சையளித்து வருகின்றனர் என்றும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.அத்துடன் காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு கொண்டு வருவதற்காக ஹெலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. (corrected & updated)
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply