கோடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும் : கமல்ஹாசன்
கோடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்த வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. இதனைத் தடுக்க முயன்ற வீட்டுக் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை – கொள்ளை வழக்கில் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மனோஜ் உள்ளிட்டவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த வழக்கிலேயே ஷயான், மனோஜ் உள்ளிட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply