அரசாங்கத்துக்கு மாகாண சபைத் தேர்தல் மீது பயம் : ஸ்ரீ ல.சு.க.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி அமைத்துள்ள அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல் மீது கொண்டுள்ள பயத்தின் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலை விரைவாக கேட்கின்றது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலை பிற்போட முடியாது. ஜனாதிபதித் தேர்தல் இவ்வருட இறுதியிலேயே நடாத்தப்பட வேண்டியுள்ளது. இந்த தேர்தலை ஜனாதிபதி விரும்பினாலேயே விரைவாக நடாத்தலாம்.
மாகாண சபைத் தேர்தல்கள் ஒன்றரை வருடங்களாகியும் நடாத்தப்படாது தேங்கிக் கிடக்கின்றன. இப்படியான தேர்தலை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது, எப்போதோ உள்ள தேர்தலை நடாத்துமாறு கோருவது எப்படி நியாயமாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply