அரசியல் ஸ்தீரத் தன்மைக்கு ஜனாதிபதித் தேர்தலே அவசியம் : குமார வெல்கம
நாட்டில் காணப்படுகின்ற அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப ஜனாதிபதித் தேர்தலே நடைபெற வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply