சேனா படைப்புழுவைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை
சேனா படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கு காலவரையறையை நிர்ணயித்து தேசிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும், அரசாங்க மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் பூச்சிக்கொல்லி முறைமையொன்றை செயற்படுத்துமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
சேனா படைப்புழு பரவி வருவதன் காரணமாக விவசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு முகங்கொடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்காக இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், அச்செயலணி தினமும் ஒன்றுகூடி இந்த பேராபத்தை கட்டுப்படுத்துவதற்கு உடனடி தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply