இலங்கை அரசு கோரிக்கை விடுக்காது இராணுவ உதவியை அமெரிக்கா வழங்க முடியாது : ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

பாதுகாப்பு வலயத்திலிருந்து சிவிலியன்களை மீட்பது தொடர்பில் அமெரிக்காவிடம் எந்த விதமான இராணுவ உதவியையும் இலங்கை அரசாங்கம் கோரவில்லை. அவ்வாறு உத்தியோக பூர்வமாகக் கோரிக்கை விடுக்காமல் இராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கமுடியாது என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அவ்வாறு இராணுவ உதவி தேவையாயின் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும். அப்படியாயினும் நாங்கள் முதலில் எங்கள் நட்பு நாடான இந்தியாவிடமே உதவியை கோருவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பாதுகாப்பு வலயத்தில் உள்ள சிவிலியன்களை மீட்கும் நோக்கில் அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று தயாராக இருப்பதாக வெளிவந்துள்ள தகவல்களை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் கூறியதாவது சிவிலியன்களை மீட்கும் விவகாரத்தில் நாஙகள் இதுவரை எந்த நாட்டினதும் இராணுவ உதவியையும் கோரவில்லை. அவ்வாறு கோரவேண்டிய தேவை இல்லை என்று நாங்கள் கருதுகின்றோம். காரணம் முக்கியமான பகுதியை எமது இராணுவத்தினர் செய்து முடித்துள்ளனர். எனவே பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள சிவிலியன்களையும் இராணுவத்தினர் மீட்டுவிடுவார்கள் என்பது உறுதியாகவுள்ளது.

எனவே வெளிநாடொன்றின் இராணுவ உதவி தேவைப்படாது என்று நம்புகின்றோம். விசேடமாக அமெரிக்காவிடம் நாங்கள் இராணுவ உதவியை கோரவில்லை. இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்காமல் அமெரிக்கா இராணுவ உதவியை வழங்க முடியாது. எமக்கு ஒருவேளை இராணுவ உதவி தேவைப்படின் முதலில் நாங்கள் எமது நட்பு நாடுகளிடமே கோரிக்கை விடுப்போம். அதாவது இந்தியாவிடம் கேட்போம். ஆனால் அதற்கான தேவை இதுவரை எழவில்லை. இதேவேளை இன்னும் 48 மணிநேரத்தில் (நேற்று) பாதுகாப்பு வலயத்தில் உள்ள அனைத்து மக்களும் வந்துவிடுவார்கள் என்று கருதுகின்றோம். அதன் பின்னர் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு கிட்டிவிடும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply