அமெரிக்க வங்கியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி

தெற்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள செப்ரிங் பகுதியில், இன்று காலை துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர், திடீரென கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபர் 21 வயதுடைய செப்ரிங் பகுதியை சேர்ந்தவராக கருதப்படுகிறது. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கையின் படி, அமெரிக்காவில் 2017-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 40,000 பொதுமக்கள் இதுபோன்ற திடீர் தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்க மக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரச்சனை இந்த அளவுக்கு தீவிரமாக இருந்தபோதிலும், பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான கடும் சட்டங்கள் இயற்றும் முயற்சிகள் பல ஆண்டுகளாக இழுபறியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply