இராணுவ வீரர்கள் தொடர்பில் ஐ.நா சபை அனுதாபம்
ஆபிரிக்க நாடான மாலியில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமை பற்றி ஐக்கிய நாடுகள் சபை அனுதாபம் வெளியிட்டுள்ளது.
இவ்வாறான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு அமைய போர்க் குற்றமாக கருதப்படுகிறது என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
மாலி நேரப்படி நேற்று காலை 6.00 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் பற்றி ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையின் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply