எகிப்தில் விமான தாக்குதல்- 2 பயங்கரவாத தலைவர்களை கொன்றது ராணுவம்
எகிப்தில் அரசுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக ராணுவத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வடக்கு சினாய் மாகாணத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து பயங்கரவாதிகள் இருந்த பகுதியில் ராணுவத்தினர் விமான தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 2 பயங்கரவாத தலைவர்கள் உயிரிழந்ததாக எகிப்தின் ஆயுதப் படை செய்தித் தொடர்பாளர் டாமர் அல்-ரெஃபி தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த வாரம் எகிப்தின் ராணுவத்தினர் நாடு முழுவதும் நடத்திய தாக்குதல்களில், 64 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
எகிப்தில் அதிபர் முகமது மோர்சியின் ஆட்சியை 2013ம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவம் அகற்றியதையடுத்து பயங்கரவாத தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த பயங்கரவாத தாக்குதல்கள் வடக்கு சினாயில் இருந்து தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பிற மாகாணங்களுக்கும் பரவின. காப்டிக் சிறுபான்மையினரை குறிவைத்து, தேவாலய குண்டுவெடிப்பு மற்றும் துப்பக்கிச் சூடு சம்பவங்களும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply