புனரமைப்பு நடவடிக்கை பற்றியே விஜே நம்பியாருடன் பேசப்படும்: சமரசிங்க

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மோதலுக்குப் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இலங்கைக்கு வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயக அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி விஜே நம்பியாரைச் சந்திக்கவிருக்கும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அரசாங்கத்தின் திட்டம்பற்றிக் கலந்துரையாடவுள்ளார்.

பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களைப் பாதுகாப்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காகவே பான்கீ மூன் தனது அலுவலக சிரேஷ்ட அதிகாரியான விஜே நம்பியாரை இலங்கைக்கு அனுப்பியுள்ளார். எனினும், இன்னும் சில மணித்தியாலங்களில் பாதுகாப்பு வலயத்திலிருந்து அனைத்து மக்களும் வெளியேற்றப்பட்டுவிடுவார்கள் என்பதால் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் எண்ணிக்கையான மக்கள் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாகவும், கரையோரப் பகுதி முழுவதையும் அரசாங்கப் படைகள் பாதுகாத்திருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இதனால், விஜே நம்பியாருடனான சந்திப்பில் மோதல்களுக்குப் பின்னரான புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்தே முக்கியமாகக் கலந்துரையாடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டிருக்கும் மக்கள் குறித்து ஆராய்வதற்கு இலங்கை வந்த விஜே நம்பியார் நாளை திங்கட்கிழமை வவுனியாவுக்குச் சென்று நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களைப் பார்வையிடவுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply